செய்தி நிறுவனங்கள், இணைய ஊடகங்கள் அல்லது யூடியூப் (YouTube) சேனல்கள் திட்டமிட்ட முறையில் பொய் தகவல்களைப் பரப்பினால், அதனால் ஏற்படும் பாதிப்பைப் போல 5 மடங்கு வரை இழப்பீடு அல்லது அபராதம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன் கூடுதலாக, தீய நோக்கத்துடன் அவதூறு பரப்புவோருக்குக் கடுமையான சிறை தண்டனை வழங்கவும் இந்தச் சட்டத்தில் இடமுண்டு.
குறிப்பாக இலாப நோக்கத்திற்காகவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும் சட்டவிரோதத் தகவல்களைப் பரப்புபவர்களை ஒடுக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) தலைவர் லீ ஜே மியுங் தலைமையிலான அரசாங்கம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் போலிச் செய்திகளால் ஜனநாயகம் அச்சுறுத்தப்படுவதால் இச்சட்டம் அவசியம் என ஆளும் தரப்பு வாதிடுகிறது.
இருப்பினும், இது ஊடகங்களின் குரலை நசுக்கும் செயல் என்றும், கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தென்கொரியாவில் ஊடகச் சுதந்திரம் குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.

