spt01
செய்திகள்விளையாட்டு

சொதப்பலான துடுப்பாட்டம் – தொடரை இழந்தது இலங்கை!!

Share

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் சொதப்பலான துடுப்பாட்ட வரிசையால் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கேன் ரிச்சர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அதனடிப்படையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...