நவம்பர் 21 அரசாங்க எதிர்ப்புப் பேரணி: SLPP மற்றும் UNP தலைவர்கள் இடையே கலந்துரையாடல்!

FB IMG 1762961709672

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணி குறித்து, இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முக்கிய தலைவர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.

சமீபத்திய மாதங்களில் எதிர்க்கட்சிகள் நடத்தும் முக்கியப் போராட்டங்களில் ஒன்றாக இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த போராட்டத்துக்கான நோக்கங்கள், ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம், ராஜித சேனாரத்ன, பிரேமநாத் சி. தொலவத்த மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version