சீரடி சாய்பாபா ஆலய நிர்வாகத்தினரின் அறிவிப்பு!

saibabav 1

Siradi Sai Baba

இந்தியா சீரடி சாய்பாபா கோவிலில் நாளை முதல் பக்தர்கள் வழிபாடாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக பக்தர்களுக்கு தடைவிதித்த பிரபல ஆலயங்களில், தற்போது வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன். பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.நாளை முதல் மகாராஷ்டிரா சீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நாளை முதல் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு முதற்கட்டமாக அனுமதி அளிக்கப்படும்.பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் போன்ற கட்டுப்பாடுகளையும் சீரடி நிர்வாகம் அறிவித்துள்ளார்.

Exit mobile version