கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85% வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.
செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடுகள் ஆரம்பமாகி பத்தாம் ஆண்டு நிறைவடையும் வரை முதலீட்டாளர் 85% பங்குகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு 15% பங்குகளும் சொந்தமாக இருக்கும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் ஆண்டு நிறைவிலிருந்து இருபதாம் ஆண்டு நிறைவடையும் வரை 75% முதலீட்டாளருக்கும் 25% இலங்கை அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது ஆண்டு நிறைவில் இருந்து ஒப்பந்தம் முடிவடையும் வரை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சொந்தமான பங்குகளின் சதவீதத்தால் உரிமை தீர்மானிக்கப்படும் .
இதேவேளை குறித்த அமைச்சரவை பத்திரம் சட்டமா அதிபராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 20,000 ஏக்கரை விற்பனை செய்வதற்கும் ஆசியாவிலேயே பாரிய மதுபான ஆலையை நிர்மாணிப்பதற்கும் இந்த அமைச்சரவை பத்திரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த அமைச்சரவை பத்திரத்தை தாம் முழுவதுமாக எதிர்ப்பதாக அதன் அமைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
#SrilankaNews