அமெரிக்காவில் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதாக படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்துள்ளார்.
ஹொலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’ படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைத்து இடம்பெற்றுவருகிறது.
இந்தநிலையில் படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சியை படமாக்கப்பட்டபோது, துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் ஜோயல் படுகாயம் அடைந்த நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
#WorldNews #CinemaNews