இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
இடிமின்னல் காரணமாக ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

