நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியா சகோடா மாகாணத்தில் இன்று இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும், ஆட் கடத்தலும் அதிகரித்து வரும் நிலையில், இன்று குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின்போது, சகோடாவிலுள்ள கொரன்யா கிராமத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றையதினம் இனந்தெரியாத நபர்கள் சிலர், அங்குள்ள சந்தையின் ஒரு பகுதியை அடித்து நொருக்கி 30 பேரைச் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.
#worldworld