பாசையூரில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றல்!

1632896722 turmuric 2

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்றையதினம் (29) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இது கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த மஞ்சள் இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு கடத்திவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளிடம் குறித்த மஞ்சள் பொதிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

Exit mobile version