1 8 3
செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலை பரீட்சைகள் : கல்வி அமைச்சின் சுற்றறிக்கை!!

Share

அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், பரீசைகள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த 26 ஆம் திகதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில், 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறும். க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2021 கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று விடுமுறை வழங்கப்படும். அந்த விடுமுறையின் பின்னர் டிசம்பர் மாதம் 27ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2022 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும். எவ்வாறாயினும், இந்த பரீட்சையை நடத்துவதில் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தரங்களில் உரிய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு போதிய கால அவகாசம் உள்ளதால், அந்தப் பாடத்திட்டங்களை முழுமையாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு,  நோன்புகளில் அதற்கேற்ப விடுமுறைகள் வழங்கப்படும்..

எவ்வாறாயினும், அந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் அல்லது வேறு மாற்று வழிகள் மூலம் பாடத்தை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 2022ம் ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...