இந்தியாசெய்திகள்

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

Share
24 661cad86a88c2
Share

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார்

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக பாஜகவை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிவிட்டு திமுக அநாகரிகமாக பேசி வருகிறது.

உலகமே பாராட்டும் தலைவராக இருக்கும் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் மோடியின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை.

காங்கிரஸ், திமுக கட்சிகள் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய அரசு வழங்கும் நிதியை வைத்தும் திமுக ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் மோடி பதவியேற்க அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...