ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தான்!!

jpg 1

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாற்பத்தி மூன்றாம் படையணி அரசியல் இயக்கத்தை உருவாக்கி உள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு செயற்படுகின்றார் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சம்பிக்க எம்முடனே இருக்கின்றார்.

அவர் தனி அணி ஒன்றை உருவாக்கினால் நமக்கு பலமாகவும் அரசுக்கு பாதிப்பாக அமையும்.

யார் எப்படியான அரசியல் நகர்வை முன்னெடுத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணிக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச தான் என்றனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version