யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர்.
காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையினைதொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
சுமார் 500மீற்றர் பாதை சேவையே இதுவாகும். இப்பாதை அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பினும் இதுவரை அது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாதையில் ஏற்பட்ட விபத்தை அடுத்தே இப்பகுதியில் அவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்கே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#SriLankaNews