சபரிமலை மண்டலப் பூஜை: இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்; காட்டுப் பாதையில் புனித யாத்திரை செய்வோரின் எண்ணிக்கையும் உயர்வு!

1813540 sabarimala

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பருவகாலத்தையொட்டி, கடந்த மாதம் (நவம்பர்) 16ஆம் திகதி நடை திறக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை (29 நாட்களில்) சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பூஜை மற்றும் வழிபாடுகள் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பருவகாலத்தையொட்டி, அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் திகதி வரையான தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70,000 பக்தர்கள்) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

சபரிமலைக்கு நடைபயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தச் சவால் நிறைந்த காட்டுப் பாதையில் இதுவரை 37,059 பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சராசரியாகத் தினசரி 1,500 முதல் 2,500 பக்தர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த வழியாக இதுவரை 64,776 பக்தர்கள் புனிதப் பயணம் வந்துள்ளனர். இந்தப் பாதை வழியாகத் தினசரி 4,000 முதல் 5,000 பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

இந்த நடப்புப் பருவகாலத்தையொட்டி, மண்டல பூஜை வருகிற 27ஆம் திகதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 14ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

Exit mobile version