ஈராக் விமான நிலையத்தில் ரெக்கெட் தாக்குதல்!

56581354 101

ஈராக் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 04:30 மணியளவில் குறைந்தது மூன்று ரெக்கெட்டுகள் பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்திலும், அதை அண்மித்த அமெரிக்க விமான தளத்திற்கு அருகிலும் தரையிறங்கி தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்று சேதமடைந்துள்ளதாக ஈராக் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

மேலும், தாக்குதல் காரணமாக எந்த உயிர் சேதமோ அல்லது காயங்கள் எதுவுமோ பதிவாகவில்லை என்று தெரிகின்றது.

இதேவேளை, இதன்போது சேதமடைந்த விமானம் பயன்பாட்டில் இல்லாத ஈராக் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Exit mobile version