நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்தடை ஏற்படும் ஆபத்து?

New Project 58

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர்  ரஞ்ஜன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் மீண்டும் நாடு முழுவதும் மின்தடை ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version