லெபனானில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது.
இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லெபனான் நாணயத்தின் பெறுமதியும் தொடர்ந்து வீழச்சியடைந்து வரும் நிலையில், அங்கு பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதனையடுத்து, லெபானான் பெய்ரூட்டின் பிரதான விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய பாதையை மூடி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

#world