ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு

corona 2

corona

ரஷ்யாவில் திடீரென ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

ரஷ்யாவில் ஐப்பசி மாதம் முதலே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு சமீபநாட்களாக ரஷ்யாவில்கொரோனா தொற்று வீரியம் கூடியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 40,993 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரு நாட்களாக தினசரியாக ரஷ்யாவில் கொரோனவால் ஏற்படும் சாவு எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்கொரோனாவுக்கு சாவடைந்துள்ளனர்.

கொரோன தொற்றைக் கட்டுப்படுத்த ஐப்பசி 30 முதல் கார்த்திகை 7ஆம் திகதி வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் பாடசாலைகள் , உணவு விடுதிகள், ஜிம் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தடுப்பூசியை இலவசமாகவே அரசாங்கம் வழங்கி வந்தாலும் கூட இதுவரை ரஷ்ய மக்கள் தொகையில் மொத்தம் 32.5% பேர் மட்டுமே இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

உலக அளவில் கடந்த 3 மாதங்களில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், தற்போது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் 24 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 இலட்சம் பேர்சாவடைந்துமுள்ளனர் .

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந் நிலையில் பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version