MediaFile 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வல்வெட்டித்துறையில் கழிவுநீரை பொது வாய்க்காலில் விட்டவருக்கு தண்டம்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Share

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டு கழிவுநீரை மழைநீர் வழிந்தோடும் பொது வாய்க்காலுக்குள் சட்டவிரோதமாகத் திருப்பிவிட்ட ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

வல்வெட்டித்துறை தென்கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், தனது வீட்டில் இருந்து வெளியேறும் அசுத்தமான கழிவுநீரை, வீதியில் உள்ள மழைநீர் வாய்க்காலுக்குள் விடுபடி குழாய் அமைத்திருந்தார். இதனால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் (PHI) ப. தினேஷ் கள விஜயம் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தினார். குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நபருக்கு எதிராகப் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்றைய தினம் (23.01.2026) வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட நபர் தனது தவறை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.

பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவுநீரை வீதிகளில் விடுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...