எரிபொருள் விலையேற்றம் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையில்,
அரசாங்கம் சமீபகாலமாக நாட்டில் மக்கள் உறங்கும் வேளையிலேயே உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதும், பொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொள்வதுமாக உள்ளனர்.
ஆனால் எமது ஆட்சியில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews