காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பணயக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் கடந்த இரண்டு ஆண்டுகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பணயக்கைதி இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் எனப்படும் குழுவின் உறுப்பினர்களால் தான் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறுகிறார்.
பாலியல் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்த முதல் பணயக் கைதியாகவும் இவர் உள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

