14இல் இருந்து 10 ஆகக் குறைப்பு!

quarantine

ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம் குறித்து அந் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியவர்களை தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்படவுள்ளன என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 3 நாட்கள் அரசுக்குரிய இடங்களில் தங்க வைப்பது உள்பட மொத்தம் தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்களாக காணப்பட்டது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Exit mobile version