மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் இருந்து ஆணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
உப்போடையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment