யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பாக கிராம சேவகருக்கும் பொலிஸாருக்கும் குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வல்வெட்டித்துறை, வடமராட்சி மற்றும் மணற்காடு போன்ற பகுதிகளில் அண்மைகாலமாக சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் கட்டைக் காட்டில் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SriLankaNews