யாழிலிருந்து கடத்தப்பட்ட 250 Kg கஞ்சா! – இருவர் கைது

ddws

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் 250 Kg கஞ்சா யாழிலிருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்ட போது சோதனை சாவடியில் வழிமறித்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் 3 மணி அளவில் வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை ஈடுபட்ட போழுது அந்த வாகனத்தில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வாகனத்தை முழுமையாகச் சோதனை செய்தபோது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்த மற்றும் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version