டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு, இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாப் எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியுமென லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment