புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள்: பாதுகாப்பு அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

images 7 2

அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக இது குறித்துத் தெரிவிக்கையில், வீடுகளை இழந்த குடும்பங்களுக்காகப் புதிய வீடுகளைக் கட்டும் பணிகள் இந்த வாரத்திலேயே உத்தியோகபூர்வமாகத் தொடங்குகின்றன.

இதற்கான நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் ஆளணி உதவிகள் தொடர்பான அனைத்துத் தேவையான அறிவுறுத்தல்களும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

புயல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ. 25,000 அவசர உதவித்தொகை வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதமானோருக்கு ஏற்கனவே இந்த நிதி வழங்கப்பட்டுவிட்டது. விடுபட்ட ஏனைய பயனாளிகளுக்கும் இந்த வார இறுதிக்குள் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், முப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version