ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவை தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானில் அமெரிக்கப்படைகள் சென்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கினர். அதன் பின் சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
இந்நிலையில் தலிபான் அரசுக்கு ஆதரவு அளிக்க கோரி சீனா, பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானில் தலிபான்களின் அரசை அங்கீகரிக்க வேண்டுமெனவும் தவறினால் ஆப்கானில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவோமெனவும் அது உலகிற்கே பெரும் பிரச்னையாக அமையுமெனவும் தலிபான்கள் அமெரிக்கவை எச்சரித்துள்ளனர்.
#world