முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய கோரி முன்வைக்கப்பட்ட ரிட் மனு ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மூவரடங்கிய ஆணைக்குழுவால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த கால ஊழல் ஒழிப்பு செயலகத்தின் செயற்பாடுகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு என்பதை காரணம் காட்டி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பரிந்துரையை செல்லுபடியற்றதாக்குமாறும், விசாரணைகள் முடியும் வரை உரிய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதை தடுக்க உத்தரவிடுமாறு இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews