ராஜபக்சக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி வருவதை பார்த்தால் அவர்கள் ஒன்றிணையக்கூடும் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் ஆளுங்கட்சியினர் ஏற்கனவே இந்த விடயத்தை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் நிலையை அரசு உருவாக்கி வருகின்றன. ரணிலின் நிலைப்பாடும் அதுவே.
இத்தகைய சூழலில் இறுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இவர்கள் மண்டியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews