நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.
இதனால் ஆயிரத்து 273 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநியால், 344 வீடுகள் பகுதியளவிலும் இரு வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews