சந்திரமுகி 2 விழாவில் மாணவர் மீது தாக்குதல்..

chndra 1693110084

சந்திரமுகி 2 விழாவில் மாணவர் மீது தாக்குதல்..

ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் சந்திரமுகி 2 நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் கல்லூரி மாணவரை பவுன்சர்கள் தாக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டு மன்னிப்பு கோரி இருக்கிறார். “எனக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியாது. அது வெளியில் நடந்திருக்கிறது.”

“எனக்கு மாணவர்கள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். அதனால் இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எதிரானவன் தான். அமைதி மற்றும் மகிழ்ச்சி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என விரும்புபவன் நான். அவர் மாணவர் என்பதால் இது நடந்திருக்கவே கூடாது. ”

“இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இப்படி நடக்கவேண்டாம் என பவுன்சர்களை கேட்டுக்கொள்கிறேன்” என லாரன்ஸ் கூறி இருக்கிறார்.

Exit mobile version