நெதர்லாந்து நாட்டில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் கண்டன போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் போராட்டம் ராட்டர்டாம் நகரில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக, இந் நாட்டில் கொரோனா பாதுகாப்பிற்கான இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் மற்றும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மாத்திரமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப் போராட்டத்தில் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டமையினால் குறித்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் சில காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
வன்முறையின் போது அதிகமானோர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் என நெதர்லாந்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
#WorldNews