court 1 467564
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணிதப் புள்ளிகள் குறைந்ததற்காக மாணவிக்கு 160 பிரம்படி: தனியார் வகுப்பு ஆசிரியருக்கு பிணை!

Share

காலி நகரில் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி பயிலும் 11-ஆம் தர மாணவிக்கு மனிதாபிமானமற்ற முறையில் 160 பிரம்படிகள் வழங்கி காயப்படுத்திய ஆசிரியரை பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில், 11-ஆம் தர மாணவி ஒருவருக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அந்த மாணவி எதிர்பார்த்த புள்ளிகளை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். இதற்காக ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு புள்ளிக்கு 5 அடிகள் என்ற வீதத்தில் மாணவியின் இரு கைகளிலும் மொத்தம் 160 முறை பிரம்பால் அடித்துத் தண்டித்துள்ளார்.

ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காலி தலைமையக காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல ஆசிரியருக்கு அனுமதி வழங்கினார்.

 

 

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...