மனிதாபிமானத்திற்குத் தடையில்லை: ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து சூறாவளிப் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய 10 சிறைச் சாலைக் கைதிகள்!

image 280fe3a272

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கையிலுள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தங்களது ஒரு வேளை உணவைத் தியாகம் செய்து, 34.6 லட்சம் ரூபா மதிப்பிலான உணவுப் பொருட்களைப் பங்களிப்பாக வழங்கியுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைக்கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வேளை உணவைத் தவிர்த்து, அதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட பெருமளவிலான நிதியை உணவுப் பொருட்களாக வழங்கியுள்ளனர்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை: 540,679 ரூபா

மெகசின் சிறைச்சாலை: 450,710 ரூபா

வெலிக்கடை சிறைச்சாலை: 454,630 ரூபா

மகர சிறைச்சாலை: 386,010 ரூபா

போகம்பரை சிறைச்சாலை: 367,949 ரூபா

யாழ்ப்பாணம் சிறைச்சாலை: 258,612 ரூபா

மட்டக்களப்பு சிறைச்சாலை: 209,224 ரூபா

குருவிட்ட சிறைச்சாலை: 195,150 ரூபா

மாத்தறை சிறைச்சாலை: 105,046 ரூபா

மொனராகலை சிறைச்சாலை: 96,471 ரூபா

இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள கைதிகள் இன, மத பேதமின்றிப் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்காகத் தங்களது உணவைத் தியாகம் செய்து இந்த மனிதாபிமான உதவியைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version