முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் 29 ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்து, அவர்களுக்குச் சம்பளம், எரிபொருள் கொடுப்பனவுகள், வாகன வசதிகள் உட்படப் பல மில்லியன்கள் செலவிடப்பட்டதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (நவம்பர் 15) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் உரையாற்றுகையில் “ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த 29 ஒருங்கிணைப்புச் செயலாளர்களுக்கும் மில்லியன் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி: “எங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐந்து ஆலோசகர்களை மட்டுமே நியமித்துள்ளார்.”
“அவர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அப்படித்தான் அவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.”
ஜனாதிபதியின் செலவுகளிலிருந்து அனைத்து தேவையற்ற செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செலவீனத்திலிருந்து 30 கோடி ரூபாய் (300 மில்லியன்) சேமித்துள்ளார்.
“39 பேருக்குப் பதிலாக, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இதைச் சொல்ல விரும்புகிறேன்,” என்று ஆனந்த விஜேபால தெரிவித்தார்.