அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

images 10

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதி நிதியத்திற்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு மில்லியன் ரூபாவினை (ரூ. 1,000,000) இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர நடவடிக்கை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவான நிதியுதவியை வழங்குவதை உறுதி செய்கிறது.

Exit mobile version