anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

Share

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதிசெய்வதாகவும், இலங்கை எந்தவொரு இனவாத வலைக்குள்ளும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் ‘இலங்கை தினத்திற்காக’ திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தல், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, நேற்று (நவம் 22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுவதை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் பாராட்டினர்.

அரசியல், மத மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மைக்கு அப்பால், அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவிற்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும். போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு.

நாட்டில் தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்.

ஆகியவற்றுக்கு நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதிர ஆகியோருடன் தமிழ் முற்போக்கு கூட்டணியை (TPA) பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன் மற்றும் பழனி திகம்பரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை (ACMC) பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸை (SLMC) பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, இலங்கை தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி காதர் மஸ்தான், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைப் (DTNA) பிரதிநிதித்துவப்படுத்தி அமிர்தநாதன் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியைப் (ITAK) பிரதிநிதித்துவப்படுத்தி இளையதம்பி ஸ்ரீநாத், கவிந்தரன் கோடீஸ்வரன், டி.ரவிஹரன் மற்றும் சுயாதீனக் குழுவின் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...