அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

parliament2

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (நவம்பர் 27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காகப் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பின்வரும் தகவல்களைத் தெரிவித்தார்:

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நண்பகலுக்குள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உரிய துறைகளைச் சார்ந்த அமைச்சர்களும் கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version