செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர: காற்றாலை மின் திட்டம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்!

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) ஆகிய இரு தினங்கள் வடமாகாணத்தில் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விசேட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார், கொன்னையன் குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஜனாதிபதி இணைத்து வைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு மன்னார் சௌத்பார் பகுதியில் மற்றுமொரு புதிய காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கான அடிக்கல்லை அவர் நாட்டவுள்ளார்.

பிற்பகல் 2 மணி: வேலணை ஐயனார் கோயில் முன்றிலில் நடைபெறும் தைப்பொங்கல் விழா. மாலை: மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில் வளாகத்தில் வடமாகாண சுற்றுலா அபிவிருத்தி சபை நடத்தும் பொங்கல் விழா.

நாளை காலை தென்மராட்சி, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது பயனாளர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளன.

நாளை பிற்பகல் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள “முழு நாடும் ஒன்றாக” எனும் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய கருத்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வடக்கு மாகாணத்தின் எரிசக்தி, வீடமைப்பு மற்றும் கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...