மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

WhatsApp Image 2026 01 02 at 9.40.39 AM

புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகம்.

நேற்று வியாழக்கிழமை (01) பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை நேரில் சந்தித்தார்.

இதன்போது மகா நாயக்க தேரரின் நலம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் சுமுகமாக உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு செத்பிரித் பாராயணம் செய்து, புத்தாண்டிற்கான ஆசீர்வாதங்களை வழங்கினர்.

ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெறும் வழக்கத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

 

Exit mobile version