New Project 198
செய்திகள்அரசியல்இலங்கை

கொழும்பு மாநகர சபையில் 15 கால ஊழல்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

Share

கொழும்பு மாநகர சபையில் (CMC) கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான 15 ஆண்டுகாலச் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

நிதி முறைகேடுகள், முறையற்ற நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை போன்ற புகார்கள் குறித்து இந்த ஆணைக்குழு விரிவாக விசாரணை நடத்தும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் முதல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ஒரு முன்னேற்ற அறிக்கை வழங்கப்பட வேண்டும். 6 மாதங்களுக்குள் முழுமையான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும்.

விசாரணைகளின் போது கண்டறியப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சேகரிக்கப்பட்ட தகவல்களை சட்டமா அதிபர் அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கும் இந்த ஆணைக்குழுவிற்குப் பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...