டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

digital ID

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காகப் பிரத்தியேகமாக டிஜிட்டல் பொருளாதாரப் பேரவை (Digital Economic Council) ஸ்தாபிக்கப்படும்.

2026ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நாட்டு மக்களுக்காக டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.

Exit mobile version