2022 ஆம் ஆண்டு பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது.
எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20 திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தேர்தலை நடாத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் உரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
#SriLankaNews