பளை முகமாலை பிரதேசத்தில் உள்ள திருச்சபைக்கு சொந்தமான காணியொன்று திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த பளை பிரதேச சபை உறுப்பினராலேயே காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையறிந்த திருட்சபை ஊழியர்கள் குறித்த காணி தமக்கு சொந்தமானது என தெரிவித்து பெயர்பலகை ஒன்றினை காட்சிப்படுத்தியுள்ளனர்.
எனினும் இரவோடிரவாக காணிக்குள் புகுந்த நாசகாரர்கள் குறித்த பலகையை சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews