யாழ்ப்பாணம் பெரியகுளான் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் பொழுது அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மோட்டார் குண்டினை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#SriLankaNews