தங்களுடைய ஆண்டு இறுதி விடுமுறையை கழிப்பதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல சுமார் 60 அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.
இவர்கள் இப்பயணத்தில் தங்களின் பிள்ளைகளை பார்ப்பதற்கும், நாட்டை சுற்றி பார்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களில் இன்னும் சிலர் நுவரெலியாவில் தங்களின் வருட இறுதி விடுமுறையை திட்டமிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் ஜெனரல் ஹவுசை முன்கூட்டியே பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
#SriLankaNews
Leave a comment