பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

25 68f3476a27f6c

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்காகவே இந்த நடைமுறை என அவர் விளக்கியுள்ளார்.

மேலும், விரைவில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால், அதற்கான வேட்புமனுக்களை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது குறித்து ஒரு கட்சி என்ற முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் திகதி இறுதி செய்யப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றும், பொதுஜன பெரமுன ஒரு வலுவான அரசியல் கட்சியாக தன்னை முன்னிறுத்தும் என்றும் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

Exit mobile version