இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது கடற்றொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து எங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று பதிவிட்டுள்ளார்.