தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் மீளவும் உறுதிபடத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டார்.
முறையான புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மற்றும் வரைவு வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு மாற்றம் குறித்து இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.
புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைவு பற்றிய ‘கருத்துரு ஆவணம்’ (Concept Paper) மிக விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.